18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அண்ணாமலையார் திருக்கோயில் திட்டு வாசற்படியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் ஒழுகும் அவல நிலை.

அண்ணாமலையார் திருக்கோயில் திட்டு வாசற்படியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் ஒழுகும் அவல நிலை.

எழுதியவர்: mohan October 31, 2019, 10:01 am

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.மேலும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அத்துடன் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இருப்பினும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெளியே வரும் திட்டு வாசற்படியில் உடைப்பு ஏற்பட்டு மழை பெய்தால் ஒழுகும் அபாய நிலையில் உள்ளது. இது உடனடியாக இந்து அறநிலைத்துறை கண்டுகொள்ளுமா?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!