நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை என்ற கிராமம் உள்ளது.இப்பகுதியில் உள்ள இந்து துவக்கப்பள்ளி எதிரில் உள்ள கிணற்றுக்கு அருகில் திடீரென 5 அடிக்கு மேலாக பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து திடீரென விழுந்த பள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் துரிதமாக பள்ளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சரல் கற்களை கொண்டு மூடி சரி செய்தனர்.ஆலங்குளம் சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல் துறையினரின் இந்த சேவையை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
செய்தியாளர்அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.