17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்… நேரடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய வாலிப நண்பர்கள்..

கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்… நேரடியாக களத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய வாலிப நண்பர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் October 30, 2019, 7:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள மேற்கு ஊரணி (காக்கா ஊரணி) மற்றும் பெரிய ஊரணி இரு ஊரணி சந்திப்பில் அமைந்துள்ள தூம்பு உடைந்து கடந்த சில மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது.  தற்போது பெய்து வரும் மழையால் நீர் வழி (தூம்பு) உடைந்திருப்பதால் இரு ஊரணிக்கும் நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அய்யனார் புறத்தில் இருந்து மேற்கு ஊரணிக்கு நீர் வரும் நீரோடைகளும் ஆக்கிரமிப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு மற்றும் தூம்பு சம்பந்தமாக பலமுறை (பஞ்சாயத்து செயலாளர், BDO, தாசில்தார்) ஆகியோர்களிடம் நேரிலும் மனுவாகவும் பலமுறை புகார் கொடுத்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதைனையான விசயம்.

இது சம்பந்தமாக லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய வாலிப நண்பர்கள் கூறுகையில் “நீரோடை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக விரைவில் மாவட்ட ஆட்சியரை ஊர் சார்பாக சந்தித்து இது சம்பந்தமாக முறையிட உள்ளோம் என்றனர்.

அத்துடன் நின்றுவிடாமல் அரசு அலுவலர்கள் கைவிட்ட நிலையில் வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய வாலிப நண்பர்கள் அதை கவனத்தில் கொண்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் உடைந்திருந்த தூம்புக்குள் உள்ளே அடைந்திருந்த மண்ணை அகற்றி மேற்புறமும் சரி செய்து,  தற்போது மழை நீர் நன்றாக செல்ல வழி செய்துள்ளார்கள். அதே போல் இரண்டு ஊரணியின் நீர் தேக்கத்தின் பாதுகாப்பும் தற்போது உறுதிப்படுத்த பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!