17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவர் ஜெயந்திக்காக காத்திருந்து திருமணம் செய்த தம்பதியினர்.

தேவர் ஜெயந்திக்காக காத்திருந்து திருமணம் செய்த தம்பதியினர்.

எழுதியவர்: mohan October 30, 2019, 7:06 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேலரின் 112வது ஜெயநதி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் முளைபப்பாரி ஊர்வலம் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் அக்கட்சி மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஆதிசேடன் தலைமையில் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு நடைபெற்றது..தென்னிந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் அக்கட்சி வழக்கறிஞர் பிரிவுச்செயலாளர் சங்கிலி தலைமையில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(28).   தேவரின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமியுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் தேவர் ஜெயந்தி அன்றுதான் முடிப்பேன் என வைராக்கியமாகக் காத்திருந்து தேவர் ஜெயந்தியன்று உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் திருமணம் செய்த கையோடு கொட்டும் மழையில் உசிலம்பட்டியிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தேவரிடம் ஆசி பெற்றார்.இது காண்போர் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!