18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை, சாயல்குடி அரசு பள்ளிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்

திருவாடானை, சாயல்குடி அரசு பள்ளிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்

எழுதியவர்: mohan October 30, 2019, 6:17 pm

ஒவ்வொரு ஆண்டும் அக்.28 முதல் நவ. 2 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு வாரமாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கடந்த 53 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 54 வது ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் , திருவாடானை, தொண்டி ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன கீரமங்கலம், உப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரங்காடு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பாலைக்குடி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சாயல்குடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 18 பள்ளிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பீட்டர் தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவினர் மரக்கன்றுகள் நட்டனர். இந்த நிகழ்வில் 12 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!