18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய பல்கலை தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த காரைக்குடி அழகப்பா பல்கலை., துணை வேந்தருக்கு வாழ்த்து

இந்திய பல்கலை தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த காரைக்குடி அழகப்பா பல்கலை., துணை வேந்தருக்கு வாழ்த்து

எழுதியவர்: mohan October 30, 2019, 3:30 pm

கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கியூ.எஸ்.நிறுவனம் இந்தியா உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் மத்திய, மாநில மற்றும் நிகர்நிலைப் பல்கலை.,கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இத்தர வரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை., தேசிய அளவில் 24ஆம் இடம் பிடித்துள்ளது. கியூ.எஸ்.இந்தியா தரவரிசை என்பது கல்வி சார் மதிப்பீடுகள், பல்கலை., பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கட்டுரைகளின் மேற்கோள் எண்ணிக்கை, மாணவர்: ஆசிரியர் விகிதாச்சாரம், பன்னாட்டு மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். தமிழக அளவில் சென்னை ஐஐடி., அண்ணா பல்கலை.,யை அடுத்து காரைக்குடி அழகப்பா பல்கலை., 3 ஆம் இடம் பெற்றுள்ளது. கலை, அறிவியல் பல்கலை., களின் தர வரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை., தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய தர வரிசை பல்கலை பட்டியலில் கலை, அறிவியல் பல்கலை., யில் அழகப்பா பல்கலை மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை அக்.21 ல் கோவாவில் நடந்த கியூ.எஸ்.உச்சி மாநாட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் நா.ராஜேந்திரனிடம் வழங்கினார். தேசிய தரச்சான்று பெற்று பல்கலை.,க்கு பெருமை சேர்த்த துணை வேந்தர் நா.ராஜேந்திரனை, அழகப்பா பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.விநாயகமூர்த்தி, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ஆ.வள்ளி விநாயகம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!