17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நெல்லையில் கனமழை எதிரொலி-குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

நெல்லையில் கனமழை எதிரொலி-குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

எழுதியவர்: mohan October 30, 2019, 2:33 pm

நெல்லை மாவட்டம் முழுவதும் தற்போது பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், குற்றாலம், அம்பாசமுத்திரம், பாபநாசம், சிவகிரி,சேர்ந்தமங்கலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீர்பிடிப்பு உள்ள பகுதிகளிலும் நன்றாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவியில் தண்ணீர் அபாய வளைவை தாண்டி விழுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!