கீழக்கரையில் தொடர்ந்து நாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. நாய்கள் கடியால் கீழக்கரை அரசு மருத்துவமனையில் தினமும் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை சார்பாக வடக்குத்தெரு மர்கஸில் கடந்த 28ம் தேதி சமூக அமைப்புகளை ஒருங்கிணைப்பு செய்து முடிவு செய்த அடிப்படையில் இன்று (30/10/2019) கீழக்கரை நகராட்சி அலுவலகம் சென்று நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை, தெற்கு கிளை, கிழக்கு கிளை, 500 பிளேட் கிளை, நிர்வாகிகள், கீழக்கரை S D P I கட்சி நிர்வாகிகள், மக்கள் நல பாதுகாப்புக்கழக நிர்வாகிகள், சட்ட விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், இஸ்லாமிய கல்வி சங்க நிர்வாகிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.