இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அங்குள்ள தேவர்
நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக., மாவட்ட செயலருமான எம்.ஏ.முனியசாமி, அதிமுக., மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
எழுதியவர்: mohan October 30, 2019, 12:03 pm




You must be logged in to post a comment.