இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்களை கடித்து அச்சமூட்டி வருகிறது. இது சம்பந்தமாக பல அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் 10க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாயினர்.
இதை தொடர்ந்து கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மேற்பார்வையில் 50கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கீழக்கரை நகராட்சி அதிகாரிகளிடம் உட்பட நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.







You must be logged in to post a comment.