17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் விபத்தில் அடிபட்ட வாலிபா் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிாிழப்பு

மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் விபத்தில் அடிபட்ட வாலிபா் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிாிழப்பு

எழுதியவர்: mohan October 29, 2019, 7:46 pm

திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி டவுன் அருணிகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி மணிகண்டன்(23) இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆரணி சேத்துப்பட்டு சாலையில் துந்தகரீகம்பட்டு கிராமத்தின் கூட்ரோடு அருகில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டு சிகிச்சைகாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 16 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரச சிகிச்சைக்கு 1மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். விபத்தில் சிக்கிய மணிகண்டனை சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் சுமார் 1மணி நேரமாக மணிகண்டன் உயிருக்கு போராடி இருந்துள்ளான். பின்னர் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவ ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் போலீசார் உறவினர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மணிகண்டன் உறவினர்கள் கலைந்து சென்றனர்.விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!