இராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ராமேஸ்வரம் சென்ற இரண்டு சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்
காயமடைந்த 5 பேர், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மண்டபம் போலீசார் விசாரித்தனர். பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ், திருச்சியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த 10 நாட்களில் இந்த கடற்கரை பூங்கா பகுதியில் 7 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியில் தார் சாலை மிகவும் வழுவழுப்பாக இருப்பதால் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். தொடர் விபத்துக்குள்ளாகும் அச்சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரை பூங்கா பகுதியில் சுற்றுலா வேன்கள் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் காயம்.
எழுதியவர்: mohan October 29, 2019, 7:17 pm




You must be logged in to post a comment.