17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே தனியாா் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

உசிலம்பட்டி அருகே தனியாா் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

எழுதியவர்: mohan October 29, 2019, 7:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் தனியாா் பள்ளி (கெரன் பள்ளி) செயல்பட்டு வருகிறது.மாலை பள்ளிககுழந்தைகள் 30 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளிப் பேருந்து அல்லிகுண்டம் அருகே சென்ற கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.அதிா்ஷடவசமாக உயிாிழப்பு ஏதும் ஏற்படவில்லை.பள்ளிக்குழந்தைகளில் 3ம் வகுப்பு மாணவன் அட்சயப்பிரபுக்கு (8)லேசான காயம் ஏற்ப்பட்டது. .அவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்…சம்பவவமறிந்த சேடபட்டி போலிசாா் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியா் செந்தாமரை ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனா்.கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை ஈரப்பதமாக இருந்ததினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தொியவந்தது.இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!