17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீபாவளிக்கு முன்பாக நிலுவைத் தொகை 55 கோடியை வழங்காததைக் கண்டித்து மனுகொடுத்து பணம்பெறும் போராட்டத்தால் பரபரப்பு

தீபாவளிக்கு முன்பாக நிலுவைத் தொகை 55 கோடியை வழங்காததைக் கண்டித்து மனுகொடுத்து பணம்பெறும் போராட்டத்தால் பரபரப்பு

எழுதியவர்: mohan October 29, 2019, 6:22 pm

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் பகுதியில் தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 55 கோடியை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 03 ஆம் தேதி போளூரில் அரை நிர்வாணத்துடன் தமுக்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சமரசம்பேசி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் மைதிலி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பாக நிலுவைப்பணம் முழுவதும் தருவதாக ஆலை நிர்வாகம் சார்பில் ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்தனர்.

இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல் ஆலைநிர்வாகம் தீபாவளிக்குள் நிலுவை தொகையை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50 – க்கும் மேற்ப்பட்டோர் ஒன்றுகூடி கரும்பு விவசாய சங்கத்தினர் மூலம் மனு கொடுத்து பணம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போளூர் தாசில்தார் ஜெயவேல் மற்றும் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் சமரசம்பேசி இன்னும் 15 தினங்களுக்குள் கரும்பு நிலுவைத் தொகையில் ஒரு பகுதி வழங்கப்படும் என உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் தனியார் சர்க்கரை ஆலை பரபரப்பாக காணப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!