17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் சாலைகளின் குறுக்கே நிற்கும் மாடுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்-நெல்லை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

நெல்லையில் சாலைகளின் குறுக்கே நிற்கும் மாடுகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம்-நெல்லை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

எழுதியவர்: mohan October 29, 2019, 4:27 pm

நெல்லை மாநகர் முழுவதும் குறிப்பாக பேட்டை,டவுண்,ஜங்ஷன், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை, கேடிசி நகர்,புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் நடுவே மாடுகள் சுற்றி திரிகின்றது.இதனால் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையில் நடுவே இருக்கும் மாடுகள் ஏதிர்பாராத விதமாக திடீரென எழுந்து ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நெல்லை மாநகரில் மட்டும் மாடு மோதி சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சாலையில் நிற்கும் வாயில்லா ஜீவன்களுக்கும் பலந்த காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மனித உயிர்களையும், மாட்டின் உயிர்களையும் கவனத்தில் கொண்டு மாடுகளின் உரிமையாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.மேலும் உயிர்பலிகளும், விபத்துகளும் நடைபெறமால் இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து கோசலையில் விட வேண்டும். மீண்டும் சாலைகளில் மாடுகள் வராமல் தடுக்க உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதித்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!