18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – மூடப்படாத மெகா பள்ளம்.

மதுரை – மூடப்படாத மெகா பள்ளம்.

எழுதியவர்: mohan October 29, 2019, 2:58 pm

மதுரை பழங்காநத்தம் அம்மா மெஸ் அருகே நடு சாலையில் சுமார் 30 அடி ஆழத்திலும் சுமார் ஐந்து அடி நீளத்திலும் மிகப்பெரிய பள்ளம் ஒன்று விழுந்துள்ளது. இது 10 நாட்களுக்கு மேலாகியும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அருகில் அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. இது பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலை என்பதால் அதிர்வுகளை தாங்கமுடியாமல் பெரிதாகிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!