இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வடக்குத் தெரு சுகைபு மகன் நாகூர் சுபைர்அலி 27,புதுமடம் கிழக்கு தெரு இஸ்மாயில் மகன்
தங்கதுரை 26. இவர்கள் நேற்று (28.10.19) இரவு 10:30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் உச்சிப்புளியில் இருந்து புதுமடம் சென்றனர். வழியில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம் புதுமடம் பாலத்தின் மீது மோதியது. இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவரும் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உச்சிப்புளி போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்
இராமநாதபுரம் அருகே பாலத்தின் மீது பைக் மோதல். இருவர் பலி
எழுதியவர்: mohan October 29, 2019, 12:07 pm




You must be logged in to post a comment.