மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மாடக்குளம் மெயின்ரோடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்கிணறு .இதை உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கும் மற்றும் மதுரை எஸ் எஸ்
காலனி காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் உடனடியாக சரி செய்து அதன் மேல் மூடியை பொருத்தினார்கள் விரைந்து செயல்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் எஸ் எஸ் காலனி காவல்துறை அனைவருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த செய்தியை வெளியிட்ட மதுரை மாவட்ட சத்திய பாதை மாத இதழ் (கிழை நியூஸ் ) வி காளமேகம் அவர்கள் முயற்சியால் இது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது செய்தி எதிரொலி. மூடப்பட்ட ஆழ்துளை கிணறு
எழுதியவர்: mohan October 29, 2019, 11:25 am




You must be logged in to post a comment.