18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் கம்பியூட்டர் மையத்தில் நல்ல பாம்பு புகுந்தது..  ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்.

நிலக்கோட்டையில் கம்பியூட்டர் மையத்தில் நல்ல பாம்பு புகுந்தது..  ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்.

எழுதியவர்: mohan October 29, 2019, 11:19 am

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அன்பு தியேட்டர் அருகே உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில்  நல்ல பாம்பு திடீரென  புகுந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பாம்பை கண்டவுடன் அலறியடித்து கம்ப்யூட்டர் மையத்திற்கு வெளியே வந்தனர்.    கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் சீனிவாசன் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் .உடனடியாக நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கம்ப்யூட்டர் மையத்திற்குள்  புகுந்த நல்ல பாம்பை தேடி பிடித்தனர்.    இந்த பாம்பை பிடித்து தீயணைப்பு வீரர்களில் ஒருவர் கடுமையான விஷம் கொண்ட பாம்பு என்றும் இது போன்ற பாம்புகள் காடுகளில் தான் காணப்படும் என தெரிவித்தார்.  இச்சம் பவம் இப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப ப டுத்தியது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!