18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்று நடும் விழா..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மரக்கன்று நடும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் October 27, 2019, 1:30 pm

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் 50 மரக்கன்றுகள் இன்று (28/10/2019)  நடப்பட்டது. கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இதம்பாடல் கிராமத்தில் அய்யா ஊரணியை சுற்றிலும் வேங்கை, புங்கை, ஆவி மரங்கள் நடப்பட்டன.

கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் நளினிகாந்த் தலைமை தாங்கி மரக் கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதம்பாடல் பொறுப்பாளர் கனகசபாபதி முன்னிலை வகித்தார்.

கடலாடி ஒன்றிய மக்கள் பாதை தோழர்கள் இராமர், காளிச்சரண், கலைமோகன், யார்கர், முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!