17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா

ஆலங்குளத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா

எழுதியவர்: mohan October 26, 2019, 6:12 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் புறக்காவல்நிலையம்திறக்கப்பட்டது.ஆலங்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன விபத்துகள் நிகழ்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.புறக்காவல் நிலையத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.வே.அருண் சக்திகுமாா் திறந்து வைத்தார்.

50 வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கினாா். ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் ரா.கந்தப்பன் விழாவிற்கு தலைமையேற்றார்.டி.எஸ்.பி .ஜாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். ஆலங்குளம் காவல்நிலைய ஆய்வாளா் செல்வக்குமாா் வரவேற்றாா்.இவ்விழாவில் ஆலங்குளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!