17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » “பேய் இருப்பதாக நிரூபித்தால் 50 ஆயிரம் பரிசு..!” – கலெக்டர் அறிவிப்பு

“பேய் இருப்பதாக நிரூபித்தால் 50 ஆயிரம் பரிசு..!” – கலெக்டர் அறிவிப்பு

எழுதியவர்: mohan October 26, 2019, 2:04 pm

பேய் உள்ளது என்றும், பில்லி – சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என்றும் நிரூபித்தால், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என, ஒடிசா மாநில கலெக்டர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் விஜய் அம்ருதா குலாங்கே. இந்த மாவட்டத்தில் உள்ள கோபபூர் மற்றும் ஜெகன்நாத் பிரதா கிராமங்களில் சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்டது.இதையடுத்து அவர்கள் மந்திரவாதிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பில்லி – சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய மந்திரவாதிகள், பாதிக்கப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி, மனித கழிவுகளை உண்ணச் செய்தனர். மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, கன்ஜம் கலெக்டர் விஜய் அம்ருதா குலாங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது; “பில்லி – சூனியம் மூலம் ஒருவருக்கு மற்றொருவர் தீங்கு செய்ய முடியாது.ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டுமே தவிர மந்திரவாதிகளிடம் அல்ல. என் அறிவுக்கு எட்டியவரை, பேய் இல்லை; பில்லி – சூனியம் என்பது மூட நம்பிக்கை.அப்படி, பேய் உள்ளது என்றும், பில்லி – சூனியம் போன்ற செயல்களால் பலன் உள்ளது என்றும் நிரூபித்தால், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!