17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாயை இழந்த அம்மு முதுமலை முகாமில் சேர்ப்பு..!

தாயை இழந்த அம்மு முதுமலை முகாமில் சேர்ப்பு..!

எழுதியவர்: mohan October 26, 2019, 1:59 pm

வன கால்நடை மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று மாத குட்டி யானை, தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி சாகர் அருகே, தாயை இழந்து காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த மூன்று மாத குட்டி யானையை இந்த மாத தொடக்கத்தில் வனத் துறையினர் மீட்டனர். காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் ‘அம்மு’ என பெயரிடப்பட்டு அந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது.அந்த குட்டி யானையை முதுமலை பகுதிகளில் வைத்து பராமரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 9ம் தேதி அதிகாலை வனத் துறையினர் அந்த குட்டி யானையை காட்டிற்குள் கொண்டு விட்டு தொடர்ந்து அந்த கண்காணித்து வந்தனர். அப்போது, மற்ற யானைகள் ‘அம்மு’வை அருகில் சேர்த்துக்கொள்ள மறுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, சத்தியமங்கலம் வன ஊழியர்கள் அந்த குட்டி யானையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று ஒப்படைத்தனர்.கோவை மண்டல வனத் துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் யானையை பரிசோதித்து நலமாக இருப்பதாக கூறினார். தற்போது முதுமலையில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!