18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஒளி 2019 நல்லினக்க நிகழ்வு

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஒளி 2019 நல்லினக்க நிகழ்வு

எழுதியவர்: mohan October 26, 2019, 10:18 am

மதுரையில் ஓளி- 2019 நல்லினக்க ஆதரவற்ற நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம் .ARC குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் சார்பாக மதுரையில் உள்ள கிருஷ்ண ஐயங்கார் மஹாலில் நடைபெற்றது. இவர்களுடன் மதுரை ரவுண்ட் டேபிள்14 , மதுரை மகளிர் வட்டம் 8, க்ரைம் பிரீ இந்தியா மிஷன் மற்றும் ஜி.என்.இ ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மதுரை மாநகரக் காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஜி.என்.ஐ நிறுவனர் .ராஜா, மதுரை ரவுண்ட் டேபிள்.விஷ்வா, ARC குழுமத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் .சோனி ரெங்கராஜன், எம்.எஸ் செல்லமுத்து டிரஸ்ட் திரு.ராமசுப்பிரமணியம் மற்றும் ஆனைமலை ஸ் டெயோட்டா உதவி பொது மேலாளர் திரு.சேதுராஜன் ஆகியோரும் வருகை தந்து முன்னிலை வகித்தனர்.ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசுகள், திருக்குறள் & பொது அறிவு புத்தகங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ARC மற்றும் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் ரகுராம் மற்றும் .சுகன்யாரகுராம் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!