18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மறுப்பதை கண்டித்து வேடசந்தூர் தாலுகா அலுவலக முற்றுகைப் போராட்டம் – TATRATDAC கூட்டத்தில் தீர்மானம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மறுப்பதை கண்டித்து வேடசந்தூர் தாலுகா அலுவலக முற்றுகைப் போராட்டம் – TATRATDAC கூட்டத்தில் தீர்மானம்

எழுதியவர்: mohan October 25, 2019, 8:28 pm

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றியக்குழு கூட்டம் 23.10.19 அன்று காலை அய்யலூரில் சங்கத்தின் வடமதுரை ஒன்றிய தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சங்கத்தின் வடமதுரை ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வேடசந்தூர் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மறுப்பதை கண்டித்து நவம்பர் 8 அன்று வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி தொடர்ச்சியாக மனுக்களை அளித்து வருகிறோம். அவ்வாறு வழங்கப்படும் மனுக்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதவித்தொகைக்கான ஆணைகளை அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்களும் வழங்கி வருகிறார்கள்.

ஆனால், வேடசந்தூர் தாலுகாவில் மட்டும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக எங்களது சங்கத்தின் சார்பில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உதவித்தொகை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.கடந்த ஓராண்டில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் புதிதாக உதவித்தொகை வேண்டி மூன்று முறை மனு அளித்து காத்திருந்தும் இன்றுவரை அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.இந்நிலையில் இம்மாதம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 700க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.

இப்பொழுதும் எங்களது சங்கத்தின் சார்பில் அளித்த மனுக்கள் பரிசீலனைக்கு கூட எடுக்காமல் ஒருவருக்கு கூட உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, தொடர்ச்சியாக எங்களது சங்கத்தின் சார்பில் அளிக்கப்படும் மனுக்களை புறக்கணிப்பதை கண்டித்தும் உடனடியாக அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வலியுறுத்தியும் வருகிற 08.11.19 அன்று காலை முதல் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவித்தொகை கிடைக்கும்வரை தொடர் போராட்டம் நடத்துவது என்றும்,

இப்போராட்டத்தில் வடமதுரை ஒன்றியத்தில் இருந்து ஐநூறு மாற்றுத்திறனாளிகளும் மாவட்டம் முழுவதும் இருந்து 300 மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், வடமதுரை ஒன்றியக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!