நாங்குநேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட பின்னுக்கு தள்ளி முன்றாம் இடத்தை பிடித்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார்.நாங்குநேரி,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளரை தவிர போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் அதிமுக, காங்கிரஸ் தவிர்த்து மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஹரி நாடாரை விட குறைந்த வாக்குகளே பெற்றுள்ளார். இது குறித்து சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளேன். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் எந்த அளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.ஆனாலும் இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. வாக்கிற்கு பணம் கொடுக்காமல் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர் அதற்கு தாம் பெருமை அடைவதாகவும் கூறினார். மேலும் பனங்கட்டுப்படை கட்சி துவங்கி 6 மாதமே ஆன நிலையில் சுயேட்சை வேட்பாளராக தேர்தலை சந்தித்து மூன்றாவது இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் ன. அதிக வாக்குகள் பெறாவிட்டாலும்,மக்களின் மனதில் நிறைந்திருப்பதாகவும், அதிமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வழக்குகளோடு தேர்தலை சந்தித்துள்ள நிலையில் வழக்குகள் ஏதுமின்றி ஜனநாயக முறைப்படி தேர்தலை எதிர்கொண்டு 4233 வாக்குகள் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சி 3488 வாக்குகளும்,ஹரி நாடார் 4233 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.