18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எழுதியவர்: mohan October 25, 2019, 7:12 pm

27.10.2019-ம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1. மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மாசி வீதிகள், வெளி வீதிகள், அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவை தவிர மதுரை மாநகர் முழுவதும் சீருடை அணியாத காவலர்கள் குற்றத்தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2. மாசி வீதிகளில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை அந்தந்த காவல் நிலையங்களிலும் மற்றும் மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவிலும் 24 மணி நேரமும் கண்காணித்து வர காவல் ஆளிநர்கள் சுழற்றி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் பணிபுரியும் காவலர்கள் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இதனால் மதுரை மாநகரில் பொருட்கள் வாங்குவதற்கு வசதியாகவும் மற்றும் பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி இருக்க ஏதுவாக காவல் ஆணையர் அவர்கள் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.

3. மதுரை மாநகரில் வணிக நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலமோ ஒலி பெருக்கிகள் மூலம் விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

4. நான்கு மாசி வீதிகளிலும் முக்கிய சந்திப்புகளிலும் உள்ள காவல் உதவி மையங்கள் மூலம் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய காவல் ஆணையர்அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

5. மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் அந்நிய சந்தேக நபர்களின் நடமாட்டத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சீருடை அணியாத காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

6. அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!