உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஆட்டோவில் பயனம் செய்த 12 பேரில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி . மேலும் 6 பேர் படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் எழுமலையிலிருந்து உசிலம்பட்டியை நோக்கி சென்ற லாரியும், உசிலம்பட்டியிலிருந்து எருமார்பட்டியை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 12 பேரில் ஜோதில் நாயக்கனூரைச் சேர்ந்த நாகஜோதி, கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அய்யர், பாலார்பட்டியைச் சேர்ந்த ராமர், வசந்தா, மற்றும் குழந்தைகள் ஷர்மிளா, ஜனாஸ்ரீ, ஆகிய 6 பேர் படுகாயங்கருடன் மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அசோக் , சத்யா, வாசியம்மாள், முருகன்.முத்துலட்சுமி, குருவம்மாள், இறந்தவர்களின் 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்







You must be logged in to post a comment.