திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நான் ரோட்டில் அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் தண்டபாணி, சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், ஊராட்சி கழக செயலாளர்கள் ஜேசுராஜ், குருவைய்யா , பேரூராட்சி அதிமுக நிர்வாகி பந்தா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வெற்றி நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
எழுதியவர்: mohan October 25, 2019, 10:38 am




You must be logged in to post a comment.