18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே பஸ் மோதி மில் தொழிலாளி கால் துண்டானது

நிலக்கோட்டை அருகே பஸ் மோதி மில் தொழிலாளி கால் துண்டானது

எழுதியவர்: mohan October 25, 2019, 10:32 am

நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்ணா பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் சங்கரமூர்த்தி வயது 30. இவர் தற்போது நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி ஒரு நூற்பாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.  இவர்  காலை நிலக்கோட்டையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது மொபட்டில் நிலக்கோட்டை நோக்கி  புதுப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது மதுரையிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவர் மற்றொரு வாகனத்தை கடந்து செல்வதற்காக முந்திய போது எதிரே வந்த சங்கரமூர்த்தி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் சங்கரமூர்த்தி வலதுகால் துண்டானது. தகவலறிந்த நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீரர்கள் விரைந்து வந்து காயமடைந்த சுந்தரமூர்த்தி உடனடியாக தூக்கிச்சென்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!