18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய அளவிலான பஞ்சாயத்து ராஜ் விருது.

தேசிய அளவிலான பஞ்சாயத்து ராஜ் விருது.

எழுதியவர்: mohan October 25, 2019, 9:39 am

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களான சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை வசதிகள், தெருவிளக்குகள், வறிய நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரங்கள் உருவாக்கி தருதல் உள்ளிட்டவைகளை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளுக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சசாக்திகரண் புரஸ்கார் என்ற தலைப்பில் தேசிய அளவிலான முதல் வழங்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, கோவில் பாப்பாக்குடி ஊராட்சிக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சசாக்திகரண் புரஸ்கார் விருதினை மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்ஜி அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் கலந்துகொண்டார். இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி வினய் அவர்களிடம், மத்திய அரசின் விருதினை பெற்றுக் கொண்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் செல்லத்துரை அவர்கள் மற்றும் கோவில் பாப்பாக்குடி ஊராட்சியின் தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் அவர்கள் மற்றும் கோவில் பாப்பாக்குடி ஊராட்சி செயலர் திரு விவேகானந்தர் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திருமதி பிரியங்கா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!