17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுற்றுச் சூழலை பாதுகாக்க நீரில் மிதந்த இரட்டையர்கள்..!

சுற்றுச் சூழலை பாதுகாக்க நீரில் மிதந்த இரட்டையர்கள்..!

எழுதியவர்: mohan October 24, 2019, 6:02 pm

சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, அருப்புக்கோட்டையைச் சோ்ந்த இரட்டையா்கள் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீரில் மிதந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சந்திரமோகன் – இந்துமதி தம்பதி. இவர்களின் மகன்கள் விஷாலினி (11), அஷ்வின் (11). இரட்டையர்களான இவர்கள், அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.இவர்கள், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று (23ம் தேதி) ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் 23 வினாடிகள் நீரில் மிதந்து சாதனை நிகழ்த்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு, ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் மற்றும் ‘ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிா்வாகிகள் நடுவா்களாக கலந்து கொண்டு பதிவு செய்தனா். சாதனை புரிந்த விஷாலினி, அஷ்வின் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் ஆகியோா் பாராட்டினா்.இதுகுறித்து சாதனை புரிந்த இரட்டையா்கள் கூறுகையில், “இயற்கையை பாதுகாக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவே நீரில் மிதந்தோம். இதற்காக ஓராண்டு காலம் பயிற்சி செய்தோம். சாதனைக்கு ஊக்கப்படுத்திய பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!