17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெறி நாய்கள் தொல்லை: அச்சத்தில் பொதுமக்கள்.

வெறி நாய்கள் தொல்லை: அச்சத்தில் பொதுமக்கள்.

எழுதியவர்: mohan October 24, 2019, 5:55 pm

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேருராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்வோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விடாமல் துரத்துகின்றது. சில நாட்களுக்கு முன்பு வெறிநாய்கடியால் இப்பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வடுகபட்டி பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இன்று வரை பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாய் வளர்ப்போர் மற்றும் உரிமையாளரிடம் புகார் தெரிவித்தால் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், வடுகபட்டி பேரூராட்சி, மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெறிநாய்களிடம் இருந்து பொது மக்களை காக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!