17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர்பட்டிணத்தில் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சபகுதி. புதிய மின்கம்பம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை!

மரைக்காயர்பட்டிணத்தில் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தின் உச்சபகுதி. புதிய மின்கம்பம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை!

எழுதியவர்: mohan October 24, 2019, 4:35 pm

இராம நாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மரைக்காயர்பட்டிணம் பகுதியில் நீண்டகாலமாக இருக்கும் மின்கம்பம் ஒன்று முறிந்துவிழும் நிலையில் உள்ளது. இதன் உச்சிபகுதியானது உடைந்து விழும் நிலையில் காணப்படுகிறது. ஊரின் நடுவே உள்ள இந்த பழுதடைந்த மின்கம்பம் ஒருவேளை முறிந்து விழுந்தால் மிகபெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் அச்சம் தொிவித்தனா். ஆகவே மின்வாரியம் இதனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது..!

செய்திபதிவாளர் முகம்மதுநயிம் சமூக ஆர்வலர் மரைக்காயர்பட்டிணம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!