18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்நிலையத்தில் ஆய்வுக்கு வந்த மதுரை டிஐஜி ஆனி விஜியா மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

காவல்நிலையத்தில் ஆய்வுக்கு வந்த மதுரை டிஐஜி ஆனி விஜியா மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

எழுதியவர்: mohan October 24, 2019, 4:17 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் காவல் நிலையத்தில் மதுரை டி.ஐ.ஜி. ஆனி விஜயா பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் உசிலம்பட்டி டி.எஸ்.பி. ராஜா, பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி. ஆனி விஜயா விழா காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் 365 நாட்களும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மக்களின் பாதுகாப்பிற்காகவே காவல் துறை உள்ளது. மக்களும் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பான வாழ்க்கை வாழ வேண்டும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே பல குற்ற நடவடிக்கைகள் குறையும் என பேட்டியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!