17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு அணிவிக்கப்பட்டது.

முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு அணிவிக்கப்பட்டது.

எழுதியவர்: mohan October 24, 2019, 4:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி விழாவும் 57 வது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது . அதிமுக சார்பில் வழங்கிய 13.7 கிலோ எடை முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது . தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் அணிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, அதிமுக., மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!