18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்களை கட்டி 25 சாதனை; விருதுநகர் மாணவி அசத்தல்..!

கண்களை கட்டி 25 சாதனை; விருதுநகர் மாணவி அசத்தல்..!

எழுதியவர்: mohan October 24, 2019, 3:42 pm

விருதுநகரில், 7ம் வகுப்பு பயின்றுவரும் 12 வயது மாணவி ஒருவர் தனது கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு 25 வகையான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் பி.எஸ்.சி பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹர்ஷ நிவேதா(12). சிறுவயது முதலே யோகக் கலையில் சிறந்து விளங்கும் இவர், உலக சாதனையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று (23ம் தேதி) தன்னுடைய இரண்டு கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல் கலாம் படம் வரைதல், பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்யூப்பை சரிசெய்தல், சைக்கிள் ஓட்டுதல் என 25 வகையான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.இந்த சாதனையை, ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. சாதனை படைத்த மாணவி ஹர்ஷ நிவேதாவை, பி.எஸ்.சி பள்ளி முதல்வர் சாந்தி, துணைத்தலைவர் ராஜசேகரன், பொருளாளர் சரவணாபிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!