17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி.மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல்

தட்டப்பயிறு ,பட்டாணி ,கொண்டக்கடலை உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்கி அசத்தும் பள்ளி.மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குதல்

எழுதியவர்: mohan October 24, 2019, 12:28 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாலையில் பள்ளி மாணவர்களுக்கு பயிறு வகைகள் உணவாக வழங்கப்படுகிறது.தினமும் மாலை நேரத்தில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தட்டப்பயிறு,பட்டாணி ,கொண்டக்கடலை போன்ற சத்தான உணவு வகைகள் பள்ளியில் வழங்கப்படுகிறது.இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : பள்ளியில் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது பள்ளியில் பயிலும் இளம் வயது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு நாள் ஒன்றுக்கு ஒரு சத்தான உணவு என்கிற வகையில் தட்டப்பயிறு ,பட்டாணி ,கொள்ளு,கொண்டக்கடலை.கடலை பருப்பு ,பாசிப்பயிறு போன்ற உணவு வகைகள் பள்ளியில் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் சத்தான உணவினை சாப்பிட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் தங்களது பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.இளம் வயது மாணவர்கள் பசி அறிந்து உணவு வழங்கி சாப்பிடுகையில் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.இதனால் பயிற்சியும் சிறப்பாக நடைபெறுகிறது.இவ்வாறு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!