18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணம் அருகே விஏஓவை மிரட்டிய மணல் கடத்தல் குற்றவாளி கைது

அரக்கோணம் அருகே விஏஓவை மிரட்டிய மணல் கடத்தல் குற்றவாளி கைது

எழுதியவர்: mohan October 24, 2019, 9:36 am

வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா அன்வர் திகான்பேட்டை அடுத்த மேல்ஆவதம் கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தும் நபர் சந்திரசேகர் அந்த பகுதியில் ஏரி மற்றும் கால்வாயில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளான். பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு புகார் அளித்தனர் பானாவரம் ஆர் ஐ சமரபுரி அன்வர்தி கான் விஏஓ ஆனந்தராஜ் ஆகியோர் மணல் கடத்திய 2 டிராக்டர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் 2 அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான் விவரம் அறிந்த நெமிலி தாசில்தார் சதீஸ் விசாரணை மேற்கொண்டு ராணிப்பேட்டை சப்-கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார் சப்-கலெக்டர் இளம் பகவத் மணல் கடத்தல் குற்றவாளி சந்திரசேகரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!