17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

நெல்லையில் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

எழுதியவர்: mohan October 23, 2019, 7:08 pm

திருநெல்வேலி மாநகராட்சியின் பணிகளுக்காக அல்லது மாநகராட்சி அனுமதி பெற்று சாலைகளில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரை சாலையை உடைத்து எடுக்கப்பட்டு பிறகு வேலை முடிந்ததும் மீண்டும் உடைத் தெடுக்கப்பட்ட சாலையை தார் கொண்டு நிரப்பி சமதளப்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்படும் நிலை தொடர்கிறது.இதில் நெல்லை டவுண் ஆர்ச் சமீபம் பல் மருத்துவமனை அருகே உடைக்கப்பட்ட சாலை பணிமுடிந்து மாதங்கள் கடந்தும் மீண்டும் சரி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை முக்கியமான சாலையாகும். ஏனெனில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதையில் தான் செல்கிறது. இந்த பள்ளத்தில் விழுந்து நிலை தடுமாறி விபத்தை நோக்கி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிகம்.வாகனங்கள் பல இரவு நேரங்களில் விபத்துகளுக்குள்ளாகும் அபாய நிலை உள்ளதால் விரைவாக இந்த பள்ளத்தை ஜல்லி தார் கொண்டு நிரப்பி சமப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுநலன் கருதி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நலச்சங்கம் நெல்லை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!