17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடும்பதகராறில் கணவர், மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கணவர் உயிரிழப்பு.

உசிலம்பட்டி அருகே குடும்பதகராறில் கணவர், மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கணவர் உயிரிழப்பு.

எழுதியவர்: mohan October 23, 2019, 5:12 pm

உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியில் குடும்பதகராறில் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.கணவர் உயிரிழப்பு, மனைவிக்கு தீவிர சிகிச்சை.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் ராமச்சந்திரன் (28). இவரது மனைவி பாக்யலட்சுமி (26). இவர்களுக்கு 3வயதில் ரிகாஸ்ரீ என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் ராமச்சந்திரன் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் தனது மனைவி பாக்யலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் தகராறு முற்றியநிலையில் மனைவி பாக்யலட்சுமி தோட்டத்தில் பயிர்களுக்கு தெளிக்க வைத்துள்ள பூச்சிகொல்லி மருந்தினை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதை கவனித்த கணவர் ராமச்சந்திரனும் அதே மருந்தினை குடிததுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் கணவர் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி பாக்யலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. இத குறித்து எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!