18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan October 23, 2019, 4:15 pm

உங்கள் கைபேசிக்கு வரும் குறும்செய்தியில் கவனம் தேவை. உங்கள் கைபேசிக்கு தினமும் பலதரப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS) வரும். அதில் அனைத்து செய்திகளும் உண்மையானது என கூறமுடியாது, அதில் சில செய்திகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் “உங்கள் வங்கி கணக்கில் அல்லது உங்கள் தொலைபேசி எண்ணிற்கு 100 கோடி 500 கோடி பரிசுத்தொகை வந்துள்ளது…..” என்பது போன்ற ஆசையைத் தூண்டும் வகையில் SMS அல்லது பதட்டப்படும் வகையில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவோ, வேறொரு நபர் உங்கள் கணக்கை தவறுதலாக கையால்வதாகவோ SMS வரும் அல்லது உங்கள் பெயரை குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை கவனமாக கையாளுங்கள்.கீழே குறிப்பிட்டுள்ள குறுஞ்செய்திகள் போன்று, உங்களது கைபேசிக்கு வரும் பட்சத்தில் அதை உடனடியாக அழித்துவிடுங்கள், மேலும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் நீல நிறத்தில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள்.அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் கண்காணிக்கவோ / திருடப்படவோ அதிக வாய்ப்புள்ளது

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!