17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல நாட்களாக எரியாத மின்விளக்கால்பொதுமக்கள் அச்சம்

பல நாட்களாக எரியாத மின்விளக்கால்பொதுமக்கள் அச்சம்

எழுதியவர்: mohan October 23, 2019, 1:51 pm

மதுரை மாவட்டம் மன்னார் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை தியாகராஜா காலனி, ஜான்ஸ்புரம் அருகே வார்டு எண் 95 பல நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை என புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஒரு ஊழியர் வந்து நான் சரி செய்து விடுகிறேன் என்று அங்கு உள்ள பொதுமக்களிடம் ரூ. 300 பெற்றுக் கொண்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .மேலும் அந்த பகுதியில் ஒரு சில இடங்களில் சிசிடிவி போடப்பட்டுள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் சிசிடிவியில் பதிவுகள் சரியாக தெரியவில்லை எனவும் விளக்கு வெளிச்சம் இருந்தால் திருட்டு பயமும் சிசிடிவியில் காட்சிகளை தெளிவாகவும் பார்க்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .மேலும் கையூட்டு பெற்று மாநகராட்சி மின் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!