17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

எழுதியவர்: mohan October 23, 2019, 11:03 am

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தூத்துக்குடி முதல் கொல்லம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் ஆலங்குளம் சாலையானது போக்குவரத்து இடையூறு, சாலை விபத்து என அடிக்கடி நிகழ்ந்த வண்ணமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆலங்குளம் தனி பிரிவு காவலர் ஜெயபாலன் சமூக ஆர்வலராக களத்தில் இறங்கி பல்வேறு சமூக ஆர்வலரை இணைத்து கொண்டு சாலை நடுவே பேரி கார்டு, கண்காணிப்பு கேமிரா, சிக்னல் விளக்கு , மருத்துவ வசதியுடன் போக்குவரத்து கண்காணிப்பு அறை, என பல பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் இதனை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் திறப்பு விழா காத்திருக்கையில் காவலருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு பல்வேறு அமைப்பினர் மற்றொரு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.அதாவது இரண்டாவது கட்டமாக நல்லூர் விலக்கு முதல் ஆண்டிப்பட்டி விலக்கு சாலை வரை நடுவே பேரி கார்டு அமைக்க வேண்டும் இதனால் ஆலங்குளம் பகுதியில் விபத்து குறையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) , பீடி தொழிலாளர்கள் சங்க பெண்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!