17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்

மதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்

எழுதியவர்: mohan October 22, 2019, 6:58 pm

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாக வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு மூட முடியாது என்றும் படிப்படியாக மூடப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுகவின் எந்த முயற்சிகளும் எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், அதுகுறித்த விவதாங்கள் தேவையில்லை என்றார்.இதற்கிடையே முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுக்கடைகளை மூட வேண்டும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!