17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிவகாசி அருகே நதிக்குடியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்

சிவகாசி அருகே நதிக்குடியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து-2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயம்

எழுதியவர்: mohan October 22, 2019, 5:29 pm

சிவகாசி அருகே நதிக்குடியில் அபிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ராக்கெட் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ராக்கெட் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். பட்டாசு தயாரிப்பு ஒரு அறை சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் விபத்தில் படுகாயமடைந்த கணேசன், சுதா, முருக சரஸ்வதி ஆகிய 3 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க பட்டாசு தயாரிப்பு அறைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.வெடி விபத்து தொடர்பாக மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!