21/ 10 /2019 அன்று ஆர் எஸ் மங்கலம் பேருந்து நிலையத்தில் வயதான முதியவர் பேரூரை சேர்ந்த அழகு என்பவர் மரணம் அடைந்தார். திருமணம் செய்தது கொத்திடல்.25 ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.ஆர்எஸ் மங்கலம் காவல் துறையின் மூலமாக அவர்
மனைவிக்கும், உறவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டும் வர மறுத்தனர்.எனவே இன்று 22/10/2019 காவல்துறை உதவியுடன் தி மு க அழகேசன் பேரூராச்சி கணேசன், வருவாய்த்துறை அதிகாரி சாந்தகுமார்,தீபம் இந்திய அறக்கட்டளை மதிவாணன், மக்கள் பாதை நூருல் அமீன், சமூக ஆர்வலர் பாதுஷா ஆசிரியர், போன்றோர் முன்னெடுத்து உடல் ஆர்எஸ் மங்கலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இறுதிநிகழ்வில் பேரையூரை சேர்ந்த அவரின் உறவினர்கள் காளிமுத்தன் உட்பட ஐந்துபேர்,சமூக ஆர்வலரான பொய்யாமொழி சங்கர்,ஜோசப் ஆல்பட், இம்தாத்,நாம்தமிழர் கணேசன், தாஜுதீன், பிலால் போன்றோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
ஆர்எஸ் மங்கலத்தில் ஓங்கிய மனிதநேயம்
எழுதியவர்: mohan October 22, 2019, 5:22 pm




You must be logged in to post a comment.