17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடன் தொல்லையால் மருத்துவா் துாக்கு போட்டு தற்கொலை.

கடன் தொல்லையால் மருத்துவா் துாக்கு போட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan October 22, 2019, 12:31 pm

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (55), ஹோமியோபதி டாக்டர். இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார். சவுந்தர்ராஜன் திருவண்ணாமலையில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.16 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியிருந்தார். அதற்கான தவணையை வட்டியுடன் சேர்த்து முறையாக கட்டி வந்தார்.இந்நிலையில் வருமானம் சரிவர இல்லாததால் கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றனர். தவணைத் தொகையை ஏன் கட்டவில்லை என கேட்டார்கள். மேலும் இன்று22.10.19 காலை 10 மணிக்குள் தவணையை செலுத்தாவிட்டல் வீட்டிற்கு சீல் வைத்து பூட்டிவிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த சவுந்தர்ராஜன் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தனியாக இருந்தார்.இந்நிலையில் நேற்று காலை அவரது மனைவி அமுதா அறையின் கதவை திறந்தபோது சவுந்தர்ராஜன் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அமுதா அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் வி.ஏ.ஓ. முத்து மற்றும் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தானிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!