18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 22, 2019, 11:01 am

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக தமிழகம் முழுவதும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியபோட்டி, பேச்சுப்போட்டி, ஓட்டபந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு, மற்றும் ஆசிரியர்கள், காவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!