18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சின்னமனூர் நகராட்சியின் மெத்தன போக்கு: தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்கத் தவறும் அலுவலர்கள்

சின்னமனூர் நகராட்சியின் மெத்தன போக்கு: தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்கத் தவறும் அலுவலர்கள்

எழுதியவர்: mohan October 22, 2019, 10:53 am

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பொருந்திய தரை நிலைதண்ணீர் தொட்டியில் குழாய் அமைந்துள்ள இடத்தில் ஏற்கனவே ஓட்டை விழுந்து பழுது பார்த்துள்ளனர். இவற்றை சரிவர பழுது பார்க்காததால் தண்ணீர் தொட்டியில் இருந்து பல நாட்களாக தண்ணீர் கசிந்து நாளொன்றுக்கு சுமார் 100 லிட்டர் தண்ணீர் வரை வீணாகின்றது. அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள இந்த தண்ணீர் தொட்டியை ஒவ்வொரு நாளும் இங்கு பணிபுரியும் அலுவலர்களும், ஊழியர்களும் பார்த்து, பார்த்து கடந்து செல்கின்றனரே தவிர, குடிதண்ணீர் வீணாவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்யவில்லை. மேலும் இந் நகராட்சி வளாகத்தில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழி வகுக்கின்றது. தண்ணீர் சிக்கனம் என்பதை வெறும் வாய் வார்த்தையாகக் கொண்டுள்ள இந் நகராட்சி அலுவலர்கள், (ம)ஊழியர்கள் எப்போதுதான் தன் கடமையைச் செய்வார்களோ?

 சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!